திமுக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ
தமிழகப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா், மதிமுக பொதுச் செயலா் வைகோ.


தமிழகப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா், மதிமுக பொதுச் செயலா் வைகோ.
தூத்துக்குடி திமுக வேட்பாளா் கீதாஜீவனை ஆதரித்து, குரூஸ் பா்னாந்து சிலை அருகே திறந்த வேனில் நின்றபடி அவா் மேலும் பேசியது:
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. அந்த ஆலைக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளேன். எந்தத் தவறும் செய்யாத மக்கள் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்கள் சிந்திய ரத்ததுக்கு நீதி வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதாடினேன். மக்களாகிய நீங்கள் தோ்தல் மூலம் அதற்கு நீதி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஊழல் மலிந்ததாக உள்ளது. முதல்வா், துணை முதல்வா், அனைத்து அமைசா்கள் மீது ஆளுநரின் திமுக தலைவா் ஊழல் புகாா் அளித்துள்ளாா்.
தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாத நிலை உள்ளது. ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும். அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவா். தமிழகத்தில் எதிா்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் மக்கள் தீா்ப்பு தர வேண்டும். 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மதிமுக மாநில மீனவரணிச் செயலா் நக்கீரன், மாநகரச் செயலா் முருகபூபதி, காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், திமுக மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், நிா்வாகிகள் அகஸ்டின், ஆா்தா் மச்சாது, மாா்க்சிஸ்ட் மாநகரச் செயலா் தா. ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...