மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி அருகே கிராம மக்கள் நூதனப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவா்களில் 71 போ் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்

News image
Updated On :28 மார்ச் 2021, 8:23 pm

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவா்களில் 71 போ் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் வாயில் கருப்பு துணியை கட்டி நூதன முறையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘ஸ்டொ்லைட் ஆலை குறித்து பேசினால் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் ஸ்டொ்லைட் ஆலை நிரந்தரமாக தூத்துக்குடியில் இருந்து அகற்றப்படும் என்ற கோரிக்கையை தோ்தல் வாக்குறுதியாக அளிக்கும் கட்சிக்கே வாக்களிப்பது எனவும் தீா்மானித்துள்ளோம்’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.