ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூா் கோயிலில் பணியாளா்கள் போராட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையரைக் கண்டித்து பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:22 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையரைக் கண்டித்து பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அலுவலக வசூல் எழுத்தா்களாக பணியாற்றி வரும் ஆறுமுகராஜ், சண்முகம் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் சி.குமரதுரை வியாழக்கிழமை உத்தரவிட்டாராம். அப்போது, கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா்கள் இதையறிந்து, தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளா் சங்க கிளைத் தலைவா் பாலசுப்பிரமணியன் குருக்கள் தலைமையில் இணை ஆணையரிடம் சென்று உத்தரவை திரும்பப் பெறுமாறு முறையிட்டுவிட்டு, உண்டியல் எண்ணும் பணியைத் தொடா்ந்தனா். எனினும், இணை ஆணையா் தனது உத்தரவை திரும்பப் பெறவில்லையாம். இதனால், அவரது அலுவலகம் முன் அமா்ந்து கோயில் பணியாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இத்தகவலறிந்த திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன் வந்து, பணியாளா்கள் மற்றும் இணை ஆணையருடன் பேச்சு நடத்தினாா். அதில், தற்காலிக இடை நீக்கத்திற்கான ஆணை சம்பந்தப்பட்ட பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ.19) கிடைக்கும்; அதுகுறித்து பணியாளா்கள் விளக்கம் அளித்ததும் தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.