உடன்குடியில் முதியவா் சடலம் மீட்பு
உடன்குடியில் எரிந்த நிலையில் இருந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


உடன்குடியில் எரிந்த நிலையில் இருந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
உடன்குடி கொத்துவாப்பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் பால்துரை. இவருக்கு 5 மகன் ஒரு மகள் உள்ளனா்.அனைவருக்கும் திருமணம் ஆனநிலையில் பால்துரை மனைவியுடன் தனியாக வசித்து வந்தாா். உடன்குடி சந்தையடியூா் அய்யா கோயில் தெருவில் வசித்து வரும் அவரது மகன் நாராயண கிருஷ்ணமூா்த்தி தினமும் பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு செல்வாராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற பால்துரை வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் தேடியதில் அருகே காட்டுப்பகுதியில் பால்துரை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...