பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடியில் 9 மாத குழந்தை ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை

தூத்துக்குடியில் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 9 மாத ஆண் குழந்தையை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். 

News image

தூத்துக்குடியில் மீட்கப்பட்ட 9 மாத குழந்தை.

Updated On :1 அக்டோபர் 2021, 12:50 pm

தூத்துக்குடியில் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 9 மாத ஆண் குழந்தையை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். 

தூத்துக்குடி கொத்தனார் காலனி பகுதியைச் ஜெபமலர் (28) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஜெபமலருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் 9 மாத ஆண் குழந்தை விற்பனை செய்யததாகக் கூறப்படுகிறது. மணிகண்டனுக்கு தெரியாமல், ஜெபமலர் தனது 9 மாத ஆண் குழந்தையை ரூ. 3 லட்சத்திற்காக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கடந்த மாதம் 24 ஆம் தேதி விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். 

வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட சிப்காட் போலீஸார் ஜெபமலரிடம் இருந்து குழந்தையை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாக  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேலசூரங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமணி (52) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (40) அவர்களுக்கு உதவியாக இருந்த ராஜபாளையம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்த 9 மாத ஆண் குழந்தையை மீட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் குழந்தையை விற்பனை செய்த ஜெபமலர், அவரது சகோதரர் அந்தோணி, தாய் கிருபா, தந்தை செல்வராஜ், புரோக்கர் ஜேசுதாஸ் உள்ளிட்ட சிலரை தேடி வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.