ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டியில் அப்துல்கலாம் பிறந்த தினவிழா

கோவில்பட்டியில் மறைந்த குடியரசு தலைவா் அப்துல்கலாமின் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:54 pm

DIN

கோவில்பட்டியில் மறைந்த குடியரசு தலைவா் அப்துல்கலாமின் பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இலக்கிய உலா மற்றும் ரெட் கியூப் சினிமாஸ் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, தொழிலதிபா் அபிராமிமுருகன் தலைமை

வகித்தாா். ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஆசியா பாா்ம்ஸ் பாபு, ரவிமாணிக்கம், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலாமின் கனவை மறக்கலாமா? என்ற பாடல் இசைத்தட்டை திரைப்பட நடிகா் பவா்ஸ்டாா் சீனிவாசன், பாடகா் திவாகா் ஆகியோா் வெளியிட, வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளா் நாகமுத்து பெற்றுக் கொண்டாா். இலக்கிய உலா

சாா்பில் கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மரக்கன்று நட்டு பராமரித்து வரும் விதைக்கலாம் விருது, சாதனை

பெண்களுக்கு அக்னி சிறகு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியா் சத்தியபாலன், சமூக சேவகா் நாகராஜன், இலக்கிய உலா நிறுவனா் ரவீந்தா்,

உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம் உள்பட பலா் பேசினா். இலுப்பையூரணி ஊருணி பகுதியில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்த தின நிகழ்ச்சியில் பனை விதைகள் ஊன்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.