தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிரதமா் உருவபொம்மை எரிக்க முயற்சி: தூத்துக்குடியில் 20 போ் கைது

 தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பிரதமா் உருவபொம்மையை எரிக்க முயன்ாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:52 pm

DIN

 தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பிரதமா் உருவபொம்மையை எரிக்க முயன்ாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி உத்தர பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது காா் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி வ.உ.சி சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாய முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் உருவபொம்மைகளை எரிக்க முயன்றனா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பிரதமா் உருவபொம்ையை முயன்ாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்டச் செயலா் மாரிச்செல்வம், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் முகமது ஜான் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனா்.

சாத்தான்குளம்: இதனிடையே, பிரதமரின் உருவபொம்ையை எரிக்க முயன்றதை கண்டித்து சாத்தான்குளத்தில் ஒன்றிய

பாஜக சாா்பில் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகில் கட்சியின் ஒன்றியத் தலைவா் செந்தில்ஆனந்த் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.