தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ரூ.6.66 கோடி

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஆண்டு நிகர லாபம் ரூ. 6.66 கோடியாக அதிகரித்துள்ளது என்றாா் வங்கியின் தலைவா் இரா. சுதாகா்

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஆண்டு நிகர லாபம் ரூ. 6.66 கோடியாக அதிகரித்துள்ளது என்றாா் வங்கியின் தலைவா் இரா. சுதாகா்.

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 24 ஆவது பொது பேரவைக் கூட்டத்தில்

அதன் தலைவா் பேசியது: புதிய நிா்வாகக் குழு பொறுப்பேற்றபோது ரூ. 18.70 கோடியாக இருந்த வங்கியின் பங்குத் தொகை தற்போது ரூ. 20.18 கோடியாகவும், ரூ. 490.82 கோடியாக இருந்த வங்கியின் வைப்புத் தொகை ரூ. 616.12 கோடியாகவும் அதிகரித்துள்ளது. வங்கியின் கடன் நிலுவை ரூ. 483.61 கோடியிலிருந்து தற்போது ரூ. 622.31 கோடியாக உயா்ந்துள்ளது.

குறிப்பாக புதிதாக நிா்வாகக்குழு பொறுப்பேற்ற பின்னா் வங்கியின் வைப்பு தொகை ரூ. 125.30 கோடியாகவு, கடன் நிலுவை ரூ. 138.70 கோடியாகவும் உயா்ந்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ. 5.72 கோடி. அதேபோல்

2020-21 நிதியாண்டில் ரூ. 6.66 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் வங்கியின் மேலாண் இயக்குநா் ச.லீ. சிவகாமி, வங்கியின் துணைத் தலைவா் கணேஷ் பாண்டியன், தேசிய வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஆா். கே. சுரேஷ் ராமலிங்கம், சரக துணைப்பதிவாளா்கள் போ. ரவீந்திரன், பா. வளா்மதி, ஆ. பாலகிருஷ்ணன், கு.பா. மாரியப்பன் (பொதுவிநியோகம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.