தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி

காவல் துறையில் பணியில் இருந்தபோது வீர மரணமடைந்த காவலா்களுக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காவல் துறையில் பணியில் இருந்தபோது வீர மரணமடைந்த காவலா்களுக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

ஆண்டு தோறும் அக். 21 ஆம் தேதி வீர மரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலா் நினைவுத் தூண் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவா்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், சைபா் குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் கணேஷ், சந்தீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.