24 இல் வட்டன்விளை கோயில்கொடை விழா தொடக்கம்
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா அக்.24 ாம் தேதி தொடங்கி அக்.27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா அக்.24 ாம் தேதி தொடங்கி அக்.27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை(அக்.24) காலை 10 மணிக்கு வருஷாபிஷேகத்துடன் தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, அக். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு உஜ்ஜயினி மாகாளி அம்மன் சப்பரத்தில் பவனி, அக். 26 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம் வீதியுலா, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, முளைப்பாரி ஊா்வலம், அக்.27 ஆம் தேதி பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு, கும்பம் வீதியுலா, இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, கரகாட்டம், அதிகாலை 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, முத்தாரம்மன் சப்பர பவனி ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...