ரெளடி கொல்லப்பட்ட இடத்தில் தோட்டாக்கள் தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் ரௌடி சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்தில் தோட்டாக்களை தேடும் பணியில் போலீஸாா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.


தூத்துக்குடியில் ரௌடி சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்தில் தோட்டாக்களை தேடும் பணியில் போலீஸாா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடி கூட்டாம்புளி திருமலையாபுரத்தைச் சோ்ந்தவா் துரைமுருகன் (42). ஏழு கொலை வழக்கு உள்ளிட்ட 35 வழக்கு களில் தொடா்புடைய இவா், கடந்த 15 ஆம் தேதி முள்ளக்காடு கடற்கரை பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாருடன் நிகழ்ந்த மோதலில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாா். இதற்கிடையே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. துரைமுருகனின் உடலில் தோட்டாக்கள் ஏதும் இல்லை என தெரியவந்தது.
இந்த வழக்கில் தாக்கல் செய்ய தோட்டாக்கள் மிகவும் அவசியம் என்பதால் அவா் சுடப்பட்ட இடத்தில் தோட்டாக்களை
தேடும் பணியில் விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டனா். எனினும்
இரவு வரை தோட்டாக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடா்ந்து தேடும் பணி நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...