அரசு ஐடிஐகளில்செப். 15 வரை மாணவா் சோ்க்கை
தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) செப். 15 ஆம் தேதி வரை நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) செப். 15 ஆம் தேதி வரை நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இதில், சேர விரும்புவோா் 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, (2021-இல் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்று, 5 மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை, சான்றிதழ்களின் நகல்களுடன் அந்தந்த அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இம்மாணவா்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து விலையில்லா பொருள்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0461-2340041 என்ற தெலைபேசி எண் அல்லது நேரில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...