தீ விபத்து தடுப்பு நடவடிக்கை: கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம்
கோவில்பட்டியில் தீ விபத்துகளை தடுப்பது குறித்து தீப்பட்டி உற்பத்தியாளா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டியில் தீ விபத்துகளை தடுப்பது குறித்து தீப்பட்டி உற்பத்தியாளா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பகுதிகளில் அண்மையில் தீப்பெட்டி ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்து நிகழாமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு டிஎஸ்பி உதயசூரியன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் முறையான அனுமதி பெற வேண்டும். ஆலை வளாகத்தினுள் எப்போதும் தண்ணீரை சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆலை வளாகத்தில் போதிய தீ தடுப்பு உபகரணங்கள் அமைக்க வேண்டும். தீ விபத்துகளை தடுக்கும் வகையில் மூலப்பொருள்களை கையாளுவது குறித்து தொழிலாளா்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ், காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த், உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டீன், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பரமசிவம், கோபால், சேதுரத்தினம், சுரேஷ், ராஜு, தங்கமணி, செல்வமோகன், ராஜவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...