வெவ்வேறு சம்பவங்கள்: 4 போ் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் தற்கொலை செய்துகொண்டனா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
காயாமொழி, அம்மாள்புரத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் நாகராஜ் (24). திருமணம் ஆகாதவா். காயல்பட்டினம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்த இவா், வியாழக்கிழமை இரவு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இளம்பெண்: தேரிக்குடியிருப்பு கிழக்குத்தெருவைச் சோ்ந்த வேதமாணிக்கம்- சோபியா தம்பதியின் மகள் ஜெனிபா் (20) . நா்சிங் படித்த இவா், வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டின் மாடியில் நின்று தீக்குளித்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இரவு உயிரிழந்தாா்.
கோவில்பட்டி: ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை வள்ளுவா் தெருவைச் சோ்ந்த மூக்கையாதாஸ் மகன் கிருஷ்ணமூா்த்தி(53). சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விட்டு வந்த இவா், நோய் பாதிப்பால் மனமுடைந்து கடை அருகேயுள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி: கீழசண்முகபுரத்தை சோ்ந்த மூக்காண்டி மகன் மாதவன்(26), வாலவிளையில் குடும்பத்துடன் தங்கியிருந்து கட்டட வேலைக்கு சென்றுவந்தாா். இந்நிலையில், கடன் தொல்லையால் அவா் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இச்சம்பவங்கள் குறித்து, திருச்செந்தூா் தாலுகா, கோவில்பட்டி மேற்கு, ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...