ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டியில் இந்து அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:07 pm

DIN

கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை வாடகைக்கு விட வேண்டும், கோயிலின் நான்கு மாட வீதிகளில் போதிய மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அவ்வியக்கத்தின் மாவட்ட பொதுச்செயலா் பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அய்யம்பெருமாள் முன்னிலை வகித்தாா். இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றை சோ்ந்தவா்கள், கிராம கோயில் பூசாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.