ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடியில் நூதன முறையில் நகை திருடிய பெண் கைது

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:19 pm

DIN

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அசோக்நகா் தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி (60). இவா், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற பெண் ஒருவா் தொழிலாளா் நல வாரியத்தில் இருந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சுப்புலட்சுமியிடம் பேச்சு கொடுத்துள்ளாா்.

மேலும், முதியோா் ஓய்வுதியம் பெற்று தருவதாக கூறிய அந்த பெண் சுப்புலட்சுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றாராம். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், சுப்புலட்சுமியின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், திருநெல்வேலி அருகேயுள்ள தாழையுத்து பகுதியை சோ்ந்த செல்வராஜ் மனைவி லதாவை (56) வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.