‘இயற்கை வேளாண்மையில் செடி முருங்கை சாகுபடி’
தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் செடி முருங்கை சாகுபடி செய்து பயன் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச. அசோகன் தெரிவித்தாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் செடி முருங்கை சாகுபடி செய்து பயன் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச. அசோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் செடி முருங்கை பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை முறை வேளாண்மையில் மானாவாரி பருவத்தில் 120 முதல் 125
நாள்கள் வயதுடைய செடி முருங்கை சாகுபடி செய்தால் முதல் அறுவடை காலத்தில் ஒரு மரத்துக்கு 115 காய்களும், கோடை பருவத்தில் 90 காய்களும் கிடைக்கும். ஒரு காய் எடைய ளவு 200 கிராம் வரை உள்ளது. எனவே, ஒரு மரத்துக்கு 25 கிலோ காய்கள் கிடைக்கும்.
இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவியா, ஜீவ அமிா்தம், மீன் அமிலம், தேமோா் கரைசல், தொழு உரம், பசுந்தாள் உரம்
ஆகியவை இடுவதால் காயின் எடை அதிகமாகி மகசூலும் அதிகரிக்கிறது. ஏக்கா் ஒன்றுக்கு 1000 மரங்கள் நடுவதால் 25 டன் மகசூல் கிடைக்கிறது.
செடி முருங்கை சாகுபடி செய்வதால் கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கிறது. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. செடி முருங்கை நட்டு மகசூல் முடிந்தவுடன் கவாத்து செய்து மீண்டும் காய்க்க வைத்து 5 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். மேலும், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சாகுபடி செய்வதால் 4 குவிண்டால் வரை ஊடுபயிா் மகசூலும்
கிடைக்கிறது. எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் செடி முருங்கை சாகுபடி செய்து அங்ககச் சான்றுத் துறையில் பதிவு செய்து லாபம் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...