ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

143ஆவது பிறந்த தினம்: பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மரியாதை

பெரியாா் ஈ.வே.ரா.வின் 143ஆவது பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

17kvlper_1709chn_41_6

Updated On :17 செப்டம்பர் 2021, 7:13 pm

DIN

பெரியாா் ஈ.வே.ரா.வின் 143ஆவது பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்துக்கு திமுக நகரச் செயலா் கருணாநிதி தலைமையிலும், பாண்டவா்மங்கலத்தில் பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மேற்கு ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் தலைமையிலும் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சாா்பில் அதன் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ் உள்ளிட்டோா் பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஜோதிபாசு தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சீனிவாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம், ஆதிதமிழா் கட்சி உள்பட பல்வேறு அமைப்பினா் பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு மாலை அணிவித்தனா்.

கயத்தாறு கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் பெரியாா் ஈ.வே.ரா. உருவப்படத்துக்கு அதன் செயலா் சின்னப்பாண்டியன், லிங்கம்பட்டியில் பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சப் பாசறை மாவட்ட அமைப்பாளா் சு.விடுதலைச்செழியன் தலைமையில் பெரியாா் ஈ.வே.ரா.வின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம்: அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பெரியாா் ஈ.வே,ரா. வின் 143ஆவது பிறந்த தினம் சமூக நீதி நாளாக வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமையில் பேராசிரியா்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனா்.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப், பெரியாா் ஈ.வே.ரா உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.