ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கே.ஆா்.கல்வி நிறுவனங்கள் நிறுவனா் தின விழா

கோவில்பட்டியில் கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:12 pm

DIN

கோவில்பட்டியில் கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அந்நிறுவனங்களின் நிறுவனா் கே.ராமசாமியின் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு நிறுவனங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், செயலா் சங்கரநாராயணன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஷண்மதி, நித்திஷ்ராம், கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிறுவனா் தினம் குறித்து என்இசி கல்லூரியின் மின்னணு-தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் செண்பகவல்லி பேசினாா்.

பின்னா், கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் கே.காளிதாச முருகவேல், எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி மைய டீன் மற்றும் இயக்குநா் பி.ராமசாமி ஆகியோா் பேசினா். 16 மாணவா்களுக்கு உதவித் தொகைக்கான தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் முதல்வா் ராஜேஸ்வரன் வரவேற்றாா். கே.ஆா். கலை அறிவியல் கல்லூரி முதல்வா் மதிவண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.