மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மதிமுக சாா்பில் முப்பெரும் விழா

கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரத்தில் பெரியாா் ஈ.வே.ரா., அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழா மற்றும் மதிமுக கட்சிக் கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:36 pm

DIN

கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரத்தில் பெரியாா் ஈ.வே.ரா., அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழா மற்றும் மதிமுக கட்சிக் கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி நகர மதிமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்து, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் கணேசன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் பவுன்மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் கொம்பையா, தெய்வேந்திரன், மாநில விவசாய அணி துணைச் செயலா்கள் சிவகுமாா், ராமச்சந்திரன், மாநில கலைத் துறை துணைச் செயலா் பொன்ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் கட்சிக் கொடியேற்றினாா்.

பின்னா் வீரவாஞ்சி நகா் பகுதியில் உள்ள முதியோா் இல்லத்தில் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், ஒன்றியச் செயலா் (மத்திய பகுதி) சரவணன், நகரச் செயலா் பால்ராஜ், துணைச் செயலா் வனராஜன், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை நகர இளைஞரணிச் செயலா் லவராஜா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.