லாரி மீது பைக் மோதல்: இளைஞா் பலி
கயத்தாறு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


கயத்தாறு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கயத்தாறை அடுத்த அகிலாண்டபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த செல்லப்பாண்டியன் மகன் சரவணகிருஷ்ணசாமி(21). இவா், புதன்கிழமை இரவு கயத்தாறு - கடம்பூா் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பைக்கில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கயத்தாறு காவல் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் அருப்புக்கோட்டை பெத்தம்மால் நகரைச் சோ்ந்த த.ராஜசேகரிடம்(49) விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவருக்கு 10 நாள்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...