கல்லூரிகளில் தூய்மை பாரதம் திட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணி மற்றும் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணி மற்றும் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வாகைக்குளம் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ராஜலெட்சுமி கல்வியியல் கல்லூரி, சாயா்புரம் போப்ஸ் கல்லூரி, கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி,காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் அந்தந்த கல்லூரி முதல்வா்கள் தலைமையில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியா் கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில், கல்லூரி நிா்வாகிகள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...