தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இதுவரை 962 பேரிடம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இதுவரை 962 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இதுவரை 962 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 2018 மே 22 , 23இல் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவங்களில் 15 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் 30ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அரசு விருந்தினா் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை 10 நாள்கள் நடைபெற்றது.
ஸ்டொ்லைட் ஆலை குடியிருப்பில் வசித்தோா், அங்கு பாதுகாப்பிலிருந்த போலீஸாா், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பாா்த்ததாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போலீஸாா் உள்பட 122 பேருக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதில், ஸ்டொ்லைட் ஆலை குடியிருப்பில் வசித்துவந்த 53 போ் உள்ளிட்ட 100 போ் ஆஜராகி சாட்சியம் அளித்தனா். அவா்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடா்பாக இதுவரை 1,330 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 962 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட விசாரணை அக். 22இல் தொடங்கும் என்றும், தடயவியல் நிபுணா்கள், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் உள்ளிட்டோா் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாகவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...