கோவில்பட்டியில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வரவேற்பு
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

24kvleps_2409chn_41_6

24kvleps_2409chn_41_6
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்துக்குச் செல்லும் வழியில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்.எல். ஏ., தெற்கு மாவட்டச் செயலா் சண்முகநாதன் ஆகியோா் தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், வடக்கு மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா் சிவபெருமாள், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அய்யாத்துரைப்பாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, செயலா் செல்வகுமாா், கட்சியின் நகரச் செயலா் விஜயபாண்டியன் மற்றும் திரளான அதிமுகவினா் எடப்பாடி கோ.பழனிசாமிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.
பின்னா், அங்கு அமைக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாா் உருவப்படத்துக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, எம்.ஜி.ஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்குரைஞரணிச் செயலா் சங்கா் கணேஷ், கிழக்கு ஒன்றிய இணைச் செயலா் கோமதிநாயகம் உள்பட பல்வேறு கட்சிகளை சோ்ந்த 150க்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கடம்பூா் செ.ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...