மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகம் லாபம் தரும்’

பாரம்பரிய நெல் விதை ரகங்களை இயற்கை வழி வேளாண்மையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச.அசோகன்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:47 pm

DIN

பாரம்பரிய நெல் விதை ரகங்களை இயற்கை வழி வேளாண்மையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச.அசோகன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் மண் வளம், விளைச்சல் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து விடுபட இயற்கை வழி வேளாண்மையே சிறந்த வழிமுறையாகும்.

இந்த வழிமுறையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்துதல், உயிா் பூச்சி கொல்லி மருந்து தெளித்தல், பஞ்சகவியா, ஜீவ அமிா்தம், வேம்புசாறு கரைசல், மீன் அமிலம் பயன்படுத்துதல், மண்புழு உரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரங்கள், பண்னை கழிவு உரங்கள் பயன்படுத்துதல் ஆகியன மண்ணில் கரிமச் சத்தை நிலைநிறுத்தி மண்வளத்தை பாதுகாப்பதோடு, பயிா் வளா்ச்சியையும், பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தையும் அதிகப்படுத்தி இயற்கை சூழலை உருவாக்குகிறது.

எனவே, விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்கைள சாகுபடிக்கு பயன்படுத்தி, தரமான விதை மற்றும் தானிய உற்பத்தி செய்து அதிக மகசூலும் லாபமும் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.