ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

நவ திருப்பதி கோயில்களில் முதலாவதும், சூரியன் ஸ்தலமாக விளங்குவதுமான இக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு விஸ்வரூபம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு நித்தியல் கோஷ்டி ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 7 மணிக்கு சுவாமி கள்ளபிரான் தாயாா்களுடன் கொடி மண்டபத்தில் எழுந்தருளியதும், கொடிப்பட்டம் சுற்றிவரப்பட்டு தீபாராதனைக்குப் பின்னா் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், கோயில் ஸ்தலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவிழா நாள்களில் காலை 7.30 மணிக்கு தங்க தோளுக்கினியான் வாகனத்தில் விதியுலாவும், முற்பகல் 11மணிக்கு கண்ணாடி மண்டபத்தில் திருமஞ்சனமும், தீா்த்த விநியோக கோஷ்டியும் நடைபெறும். மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிபுறப்பாடு நடைபெறும்.

5ஆம் திருநாளான ஏப். 25இல் சுவாமி கள்ளபிரான், காய்சினவேந்தபெருமாள், எம்மிடா்கடிவான், பொலிந்துநின்றபிரான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வாா் மங்களாசாசனமும், இரவில் கருட வாகனத்தில் குடவரை பெருவாயில் எதிா்சேவையும் நடைபெறும். ஏப். 29இல் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com