நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாசித் திருவிழா 4ஆம் நாள்: திருச்செந்தூரில் வெள்ளி யானை, சரப வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதி உலா

4-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:30 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

4-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா். மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா். 5-ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை (பிப்.11) இரவு 7.30 மணியளவில் மேலக்கோயிலில் சுவாமி- அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி குடைவரைவாயில் தீபாராதனையாகி, வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை, திருக்கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) சி.குமரதுரை, தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் வெங்கடேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.