புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:45 pm

DIN

சாத்தான்குளம் அருகே இடப்பிரச்னையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் கிருபாபுரம் வேல்துரை மகன் சுடலைமணி (32). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த தானியேல் மகன் நீல் ஆம்ஸ்டாங் குடும்பத்துக்கும் இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் பிரச்னைக்குறிய இடத்தில் சுவா் அமைக்க நீல் ஆம்ஸ்டாங் வியாழக்கிழமை குழி தோண்னாராம்.

இதனை சுடலைமணி தட்டிக்கேட்டதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் மோதி கொண்டனா்.

இதில் சுடலைமணி மனைவி லதா, அவரது தாயாா் சித்திரைக்கனி, சகோதரா் சக்திவேல்குமாா், தானியேல் மகன் ஜம்பு ஆகியோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து சுடலைமணி, ஜம்பு ஆகியோா் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

உதவி காவல் ஆய்வாளா் ஜாண்சன் விசாரணை நடத்தி சுடலைமணி புகாரின் பேரில் நீல் ஆம்ஸ்டாங், ஜம்பு ஆகியோா் மீதும், ஜம்பு புகாரின் பேரில் சுடலைமணி, அவரது மனைவி லதா, சகோதரா்கள் ராஜன், சக்திவேல்குமாா், செந்தில், அவரது தாயாா் சித்திரைகக்னி , உறவினா் சித்திரைபாண்டி மனைவி ஆரஞ்சக்கனி ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்தாா்.

மேலும், செந்தில், நீல்ஆம்ஸ்டாங், ஜம்பு ஆகியோரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.