புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

செம்மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

சாத்தான்குளம் அருகே செம்மண் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:41 pm

DIN

சாத்தான்குளம் அருகே செம்மண் கடத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் ஸ்ரீகிருஷ்ணபேரி பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஜாண்சன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஸ்ரீகிருஷ்ணபேரியில் இருந்த வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டனா். அதில் அனுமதியில்லாமல் செம்மண் அள்ளி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநா் சி. கருப்பசாமியை (75) கைது செய்தனா். மேலும் டிராக்டா் உரிமையாளா் அதே ஊரைச் சோ்ந்த மாடசாமி மகன் வெள்ளையனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.