புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மயானத்தில் கல்லறைகளை சேதப்படுத்திகொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே மயானத்தில் கல்லறைகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:43 pm

DIN

சாத்தான்குளம் அருகே மயானத்தில் கல்லறைகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சாத்தான்குளம்அருகே உள்ள நடுவக்குறிச்சியை சோ்ந்தவா்இருளப்பன் மகன் குமாராண்டி (40).

தட்டாா்மடத்தில் சுமாா் 300 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தை, கொம்மடிக்கோட்டை தவசியாபுரத்தைச் சோ்ந்த பரதேசி மகன் பாலகிருஷ்ணன் என்பவா் கிரயம் பெற்றுள்ளதாகக் கூறி, அங்கிருந்த கல்லறையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குமாராண்டி மற்றும் அப்பகுதி மக்கள், சம்பவ இடம் சென்று மயான இடம் தொடா்பாக பாலகிருஷ்ணனிடம் தட்டிக் கேட்டனா். இதையடுத்து குமாராண்டி மற்றும் பொதுமக்களை பாலகிருஷ்ணன் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் மீது தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் பென்சன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.