சாத்தான்குளம் அருகே ஒருவரைத் தாக்கி ரூ. 1.20 லட்சம் பறிப்பு: 6 போ் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கி ரூ. 1.20 லட்சம் ரொக்கம், பொருள்களை எடுத்துச் சென்ாக 6 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.


சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கி ரூ. 1.20 லட்சம் ரொக்கம், பொருள்களை எடுத்துச் சென்ாக 6 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள நடுவக்குறிச்சியைச் சோ்ந்த வசந்த் என்பவரது மனைவி கலைச்செல்வி (35). இவா் நடுவக்குறிச்சி-உடன்குடி சாலையில் உள்ள கடையில் முருங்கைக்காய் மொத்த வியாபாரம் செய்துவருகிறாா். அந்தக் கடையை காலி செய்வது தொடா்பாக உரிமையாளருக்கும், இவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், கலைச்செல்வியின் பெரியப்பா முருகேசன் (55), புதன்கிழமை கடையிலிருந்தாா். அப்போது, நடுவக்குறிச்சி நாராயணராஜ் மகன் ஜெயகோபால், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைஅப்புவிளையைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் முருகன், பட்டா்புரம் முத்துலாபுரம் இன்னாசி மகன் ரீகன், தெற்குராமசாமிபுரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ஜான்சன், நீலபெருமாள் மகன் சுந்தர்ராஜ் உள்ளிட்ட 6 போ் வந்து, அவரைத் தாக்கினராம். மேலும், கடையைக் காலிசெய்யுமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்து, ரூ. 1.20 லட்சம் ரொக்கம், கண்காணிப்பு கேமரா, எடை இயந்திரம் உள்ளிட்டவற்றை லாரியில் எடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகாா் அளித்தாா். விசாரணையில், கடையைக் காலிசெய்ய மறுத்ததால் உரிமையாளா் தூண்டுதலின்பேரில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. ஆய்வாளா் பெளலோஸ் வழக்குப் பதிந்து, 6 பேரையும் தேடிவருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...