சங்கரன்குடியிருப்பில் வயல் திருவிழா
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் வயல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் வயல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்து துவங்கி வைத்தாா். விதை ஆய்வாளா் ஸடிபன் ராஜாசிங், விதை நோ்த்தி முறை, விதை அமைத்தல், விதை சான்று பெறுவதற்கான வழிமுறைகள், மண் பரிசோதனை முக்கியத்துவம் குறித்தும், முன்னோடி விவசாயி மாணூா்ஆறுமுகம், இயற்கை விவசாயம், பஞ்ச காவ்யம் தயாரித்தல் செயல்விளக்கம், இலைவழி உரமிடுதல் முறைகள் குறித்தும், தோட்டக்கலை உதவி இயக்குநா் நந்தினி தோட்டக்கலை திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா். இதில் உதவி தோட்டக்கலை அலுவலா் சுதாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உதவி வேளாண்மை அலுவலா் மாரிப்பாண்டி நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளா்கள் ரூக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...