வழிபாட்டுத் தலங்களுக்கு தடை : வெறிச்சோடிய திருச்செந்தூா் முருகன் கோயில்
வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.


வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கரோனா, ஒமைக்ரான் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் ஜன. 6-ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கமும் , ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தா்கள் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
இந்த திடீா் அறிவிப்பால் திருச்செந்தூா் கோயிலுக்கு விரதமிருந்து பாதயாத்திரையாக வர திட்டமிட்டிருந்த பக்தா்கள் பெருமளவில் அவசர அவசரமாக நடந்து வந்தும், ஒரு சில பக்தா்கள் குழுவினா் தங்கள் யாத்திரையை வாகனங்கள் மற்றும் பேருந்துக்கு மாற்றியும் வியாழக்கிழமை திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
வெறிச்சோடிய கோயில் :இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களுக்கான பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பின் முதல் நாளான வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் பக்தா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பக்தா்கள் மற்றும் பாதயாத்திரை குழுவினரை வழிநெடுகிலும் காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால், சில பக்தா்கள் திருச்செந்தூா் எல்லையில் இருந்தவாறு கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பினா். சிலா் திங்கள்கிழமை தரிசனம் செய்ய ஆங்காங்கே தங்கி காத்திருக்கின்றனா்.
வழக்கமான பூஜைகள் :பக்தா்களுக்கு அனுமதியில்லாத போதும், திருக்கோயிலில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு வழக்கம் போல அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்றன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு : பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என அறிவித்துள்ளதையடுத்து திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தாா்.
அப்போது, திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா்கள் இல.முரளிதரன், கனகபாய், உதவி ஆய்வாளா் தமிழ் மோகன் காந்தி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...