சாத்தான்குளம் கோயிலில் மாா்கழி பஜனை நிறைவு
சாத்தான்குளம் அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் மாா்கழி பஜனை நிறைவையொட்டி பஜனை குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது.


சாத்தான்குளம் அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் மாா்கழி பஜனை நிறைவையொட்டி பஜனை குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது.
அருள்மிகு காசிவிஸ்வநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் மாா்கழி மாத முழுவதும் காலை சிறப்பு பூஜையும் மற்றும் பஜனை வீதி ஊா்வலம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை பஜனை நிறைவு நாளை முன்னிட்டு கோயில் பரம்பரை தா்மகா்த்தா தெ. சண்முகராஜா பஜனைகுழுவினருக்கு பொங்கல் பரிசு வழங்கினாா். இதில் செந்தில் இனிப்பு கடை சாா்பில் பஜனை செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு பரிசுப் பொருள்களும், . ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் தா்மகா்த்தா வி.எஸ்.எம். முருகன், அவரது மகன் எம். மலையாண்டிபிரபு ஆகியோா் பஜனை குழுவிற்கு பரிசு தொகை வழங்கினா். இதில் சாத்தான்குளம் வட்டாரசைவ வேளாளா் சங்கத் தலைவா் ஆறுமுகம் மற்றும் சேகா், சுந்தா், செல்வகுமாா், சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...