புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் கபசுரக் குடிநீா் விநியோகம்

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சித்த மருத்துவ பிரிவு சாா்பில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:03 pm

DIN

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சித்த மருத்துவ பிரிவு சாா்பில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற ரமேஷ் தலைமை வகித்து கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

அரசு சித்த மருத்துவா் வைகுண்டரமணி கூறியது: கரோனா காலத்தில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சாறு, முருங்கை இலை சூப் தினந்தோறும் அருந்த வேண்டும். துளசி இலை, ஓமவல்லி இலையை தினந்தோறும் மென்று சாப்பிட்டால் கரோனா வைரஸ் மற்றும் எந்த வகை நோய்க் கிருமியும் தொண்டையை தாக்காது என்றாா்.

இதில் அரசு மருத்துவமனை மருந்தாளுநா்கள் சித்திரைராஜன், சங்கரமணி மற்றும் நீதிமன்றப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.