தூத்துக்குடி: பஞ்சர் ஒட்டும் தொழிலாளி வெட்டிப் படுகொலை
தூத்துக்குடி புறவழிச்சாலையில் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.


தூத்துக்குடி புறவழிச்சாலையில் பஞ்சர் ஒட்டும் தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (47), இவர் தூத்துக்குடி புறவழிச்சாலையில் மீன்வளக் கல்லூரி அருகே சாலை ஓரத்தில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் பஞ்சர் ஒட்டும் கடையில் ரத்த காயத்துடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்ட லாரி ஓட்டுநர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிக்க- தஞ்சையில் கார் விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கருப்பசாமியுன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நிகழ்ந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி டவுன் பொறுப்பு உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...