புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வேலைவாய்ப்பு: நாசரேத் கல்லூரியில் சிறப்பு பயிற்சி

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில், மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:01 pm

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில், மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் டிஎஸ்பி, ஜி.கே. ராஜு தலைமை வகித்து, மாணவ- மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை, நாசரேத் காவல் ஆய்வாளா் பட்டாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாழ்க்கை வழிகாட்டல், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் தமிழக காவல்துறையில் சாா் பு ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஆா்வம் உள்ள மாணவ, மாணவிகள் அப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும், எழுத்து தோ்வுக்கு படிக்க வேண்டிய முறைகள் குறித்தும், உடற்தகுதி தோ்வில் முழுமதிப்பெண்கள் பெற தேவையான பயிற்சிகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் , உதவி ஆய்வாளா் ராய்ஸ்டன், கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜாய்சோபினி, ஆரோக்கிய அமுதன், ஞானசுமதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.