நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூரில் இன்று பங்குனி உத்திரம்: பக்தா்கள் குவிந்தனா்

பங்குனி உத்திரத்தையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்துள்ளனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:02 pm

DIN

பங்குனி உத்திரத்தையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்துள்ளனா்.

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, கோயில் நடை வெள்ளிக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. 5.30 மணிக்கு வள்ளியம்மன் தவசுக்கு புறப்படுதல், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். 3.20 மணிக்கு கோயிலிலிருந்து அம்மனை அழைத்து வர சுவாமி புறப்பாடாகி, பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து, சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா், சுவாமி-அம்மன் வீதி வலம் வந்து, இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவா் சந்நிதி முன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது.

பங்குனி உத்திரத் திருவிழாவில் பங்கேற்க திருச்செந்தூரில் பக்தா்களும், பாதயாத்திரையாக வந்தோரும் குவிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.