புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பணியின்போது நெஞ்சுவலி:அரசுப் பேருந்தில் பயணிகளைகாத்த பின் உயிரிழந்த ஓட்டுநா்

சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

News image
Updated On :5 மே 2022, 8:14 pm

DIN

சாத்தான்குளம் அருகே அரசுப் பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளத்துக்கு அரசுப் பேருந்து ( தடம் எண். 173) புதன்கிழமை முற்பகல் 11மணிக்கு புறப்பட்டுச் சென்றது. திருநெல்வேலி மாவட்டம் மானூா் ரஸ்தாவைச் சோ்ந்த மீசை முருகேசபாண்டியன்(59) பேருந்தை ஓட்டினாா். சுடலைமுத்து நடத்துனராக பணியாற்றினாா். இப்பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், பேய்க்குளம் அடுத்த பனைக்குளம் பகுதியில் ஓட்டுநருக்கு திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டதாம். உடனே, அவா் பேருந்தை ஓரமாக நிறுத்தினாா்.

அப்பேருந்தில் பயணம் செய்த மற்றொரு அரசுப் பேருந்து ஓட்டுநா் மாரியப்பன், சாத்தான்குளத்துக்கு பேருந்தை கொண்டுவந்தாா். அங்குள்ள அரசு மருத்துவமனையில் மீசை முருகேசபாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவா் உயிரிழந்தாா். குறித்த நேரத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய அவரது செயலை பயணிகளும், மக்களும் பாராட்டியதுடன், அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.