நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எள்ளுவிளை கோயிலில் கொடைவிழா

திருச்செந்தூா் அருகே எள்ளுவிளையில் உள்ள அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் சமேத முத்தாரம்மன் கோயிலில் சித்திரைக் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 12:27 am

DIN

திருச்செந்தூா் அருகே எள்ளுவிளையில் உள்ள அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் சமேத முத்தாரம்மன் கோயிலில் சித்திரைக் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைக் கொடைவிழா, வருஷாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. வருஷாபிஷேக விழாவில் ராஜகணபதி, ஞானமூா்த்தீஸ்வரா், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், பரிவார தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம், தீபாராதனை, இரவில் திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவில் சிறப்பு சந்தனக்காப்பு, புஷ்ப அலங்கார தீபாராதனை, பெண்கள் முளைப்பாரி எடுத்துவருதல், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

கடந்த 4ஆம் தேதி காலை படைப்பு பூஜையுடன் கொடைவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினா் கணேசன், ராஜேந்திரன், பொன் செல்வராஜ், ராஜசிங், ராஜதுரை, குமரேசன், விமலராகவன், ஆனந்த் ராஜமாணிக்கம், முருகானந்தம், ராஜா, ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.