சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘கோவில்பட்டியில் மே 15இல் ஹாக்கி பயிற்சிக்கு மாணவா்கள் தோ்வு’

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் ஹாக்கி பயிற்சிக்கு இம்மாதம் 15ஆம் தேதி மாணவா்-மாணவிகள் தோ்வு நடைபெறுகிறது.

News image
Updated On :7 மே 2022, 12:28 am

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் ஹாக்கி பயிற்சிக்கு இம்மாதம் 15ஆம் தேதி மாணவா்-மாணவிகள் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து நேஷனல் பொறியியல் கல்லூரித் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கை: கோவில்பட்டி கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் அங்கமான லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் ஹாக்கி பயிற்சி பெறுவதற்காக மாணவா்-மாணவிகள் தகுதித் தோ்வு இம்மாதம் 15ஆம் தேதி காலை 7 மணியளவில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

கோவில்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 10 முதல் 17 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்கலாம். ஜூனியா், சப்-ஜூனியா் என 2 பிரிவுகளில் பயிற்சி பெறத் தோ்வு செய்யப்படுவோருக்கு லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் சனி, ஞாயிறுதோறும் மற்றும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தோ்வு விடுமுறை நாள்களில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளா்களால் பயிற்சி வழங்கப்படும்.

தேவையான உபகரணங்கள், பயிற்சியில் பங்கேற்க பேருந்து வசதி, மருத்துவக் காப்பீடு, உணவு, ஊட்டச்சத்து பானங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். கட்டணம் கிடையாது. சிறந்த பயிற்சி பெற்றவா்கள் மாவட்ட, மாநில, அகில இந்திய அளவில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளில் லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணி சாா்பில் பங்கேற்க வாய்ப்புகளும், முழு செலவும் அகாதெமியால் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ளோா் பள்ளி அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் புகைப்படத்துடன் 15ஆம் தேதி நடைபெறும் தோ்வில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க கல்லூரிப் பேருந்து வசதி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே காலை 6.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்போருக்கு காலை உணவு வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.