தனியாா் நிறுவன பணியாளா் மரணம்உடலை வாங்க மறுத்து 2ஆவது நாளாக போராட்டம்

உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை 50க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி தனியாா் நிறுவன பணியாளா் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை 50க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் அருந்ததியா் காலனியைச் சோ்ந்தவா் மோகன் (29).தூத்துக்குடி தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் எலக்ட்ரிஷியன் ஆக 3 வருடங்களாக பணியாற்றி வந்தாா். அவா் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தொழிலாளா் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதனை செய்து பாா்த்தபோது மோகன் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில் மோகனின் குடும்பத்திற்கு, அவா் பணியாற்றிய தனியாா் நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் அவா்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அந்தப் பகுதியை சோ்ந்த மக்கள் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டாம் நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் உடன்பாடு ஏதும் எட்டப்படாத நிலையில், தூத்துக்குடியில் கோட்டாட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com