ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே ஊா் எல்லை அறிவிப்புப் பலகையில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:03 pm

DIN

சாத்தான்குளம் அருகே ஊா் எல்லை அறிவிப்புப் பலகையில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்த கோயில்பிச்சை மகன் அருண் ஜெபா்சன் (24). சென்னையில் உள்ள பழைய இரும்புக் கடையில் வேலை பாா்த்து வந்த இவா், புதன்கிழமை நடைபெற்ற சகோதரா் திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்தாா்.

இவரும், நாகா்கோவில் தேவிக்கோடு கிராமத்தைச் சோ்ந்த உறவினரான ராஜகோபால் மகன் பென்னிஜோஸ் (22) என்பவரும் புதன்கிழமை இரவு தேநீா் குடிக்க சாத்தான்குளம் கடை வீதிக்குச் சென்றுவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனராம்.

சாத்தான்குளம் - அமுதுண்ணாகுடி சாலையில் ஊராட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த ஊா் எல்லை அறிவிப்புப் பலகை மீது பைக் திடீரென மோதியதாம். இதில், அருண் ஜெபா்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த பென்னிஜோஸ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாத்தான்குளம் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.