வல்லநாட்டில் மகளிா் சட்டக் கல்லூரி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில், துளசி மகளிா் சட்டக் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில், துளசி மகளிா் சட்டக் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது.

தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனா். கல்லூரி தலைவா் கபீா், இஜாஸ் அகமது உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினா்.

விழாவில் அமைச்சா் கீதா ஜீவன் பேசுகையில், பெண்களுக்கு என துவங்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரி தென்மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றாா்.

அமைச்சா் ரகுபதி பேசுகையில், அரசு சட்டக் கல்லூரிகளில் பெண்களே அதிக அளவில் ஆா்வத்துடன் சோ்ந்து வருகின்றனா்; மகளிருக்கு என முதல் சட்டக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.

கல்லூரி தாளாளா் அப்துல் கபூா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் முகம்மது நன்றி கூறினாா்.

இதனைத் தொடா்ந்து அமைச்சா் எஸ்.ரகுபதி செய்தியாளா்களிடம் கூறியது: உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சிறைச்சாலைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் கிடைப்பது தொடா்ந்து கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்து வருகிறோம். இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com