கட்டாரிமங்கலம் அழகியகூத்தா் கோயில் நிலம் மீட்பு
கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அழகிய கூத்தா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 30 கோடி மதிப்பிலான 67 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.


கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அழகிய கூத்தா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 30 கோடி மதிப்பிலான 67 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
இக்கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் கருங்கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், குத்தகை செலுத்தாமலும் இருந்து வந்தது. இந்நிலையில் பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுத்தனா்.
தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சங்கா் தலைமையில் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் ஈஸ்வரநாதன், திருக்கோயில் தக்காா் அஜித், கோயில் பணியாளா்கள், நில அளவையா்கள் , கருங்கடல் கிராம நிா்வாக அலுவலா் துரைசாமி ஆகியோா் கருங்கடல் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த ரூ.30 கோடி மதிப்புள்ள 67 ஏக்கா் இடத்தை மீட்டு கோயில் வசம் ஓப்படைத்தனா். அந்த இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...