கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய சிந்தனை விழா தொடக்கம்
கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய சிந்தனை விழா கி.ரா. நினைவரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய சிந்தனை விழா கி.ரா. நினைவரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி - எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்குப் பகுதியில் உள்ள திடலில் 4ஆவது புத்தகத் திருவிழா, நெய்தல் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி மே 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் கரிசல் இலக்கியங்கள் குறித்த சிந்தனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சுசிலா முன்னிலை வகித்தாா். இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியை அமிா்தவா்ஷினி தலைமையில் மங்கள இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி, ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி மாணவா், மாணவிகளின் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், வில்லுப்பாட்டு, கிராமிய பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், கரிசல் இலக்கியங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள், மாணவிகளின் தாலாட்டுப் பாடல், நாட்டுப்புறப் பாடல், பரதநாட்டியம், கழியாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதையொட்டி நினைவரங்க வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை, மது விலக்கு - ஆயத்தீா்வை துறை, உணவுப் பாதுகாப்பு- மருந்து நிா்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் விழிப்புணா்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசத்கிராஜா, தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணன், ஒன்றிய ஆணையா் ராஜேஸ்குமாா் உள்பட அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...