மகாகவி பாரதியாா் பிறந்ததினம்: எட்டயபுரத்தில் 'தினமணி' சாா்பில் மாலை அணிவித்து மரியாதை

பாரதியாரின் 142-ஆவது பிறந்தநாளையொட்டி  எட்டயபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ‘தினமணி’ சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எட்டயபுரம் பாரதியாா் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன்.
எட்டயபுரம் பாரதியாா் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன்.

தூத்துக்குடி: மகாகவி பாரதியாரின் 142-ஆவது பிறந்தநாளையொட்டி அவா் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ‘தினமணி’ சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதியாா் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பாரதி நினைவு இல்லத்தில் இருந்து, பாரதி அன்பா்கள், பள்ளி மாணவா் - மாணவிகள் பாரதியாா் வேடமணிந்து, பாரதி பாடல்களைப் பாடியவாறு மணிமண்டபம்

நோக்கி ஊா்வலம் சென்றனா். மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியின் சிலைக்கு, ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் மற்றும் பாரதி அன்பா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த ஊா்வலத்தில், எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் அனுஷியா தலைமையில் மாணவிகள் பங்கேற்றனா். தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் லால்பகதூா் கென்னடி தலைமையில் பாரதி வேடமணிந்த மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும விளம்பரப் பிரிவு முதுநிலை துணைத்தலைவா் ஜெ.விக்னேஷ்குமாா், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்க தேசியத் தலைவா் கோ.பெரியண்ணன், இதய கீதம் ராமானுஜம், சேத்தியாதோப்பு தமிழ்ச்சங்க நிறுவனா் ஆனைவாரி ஆனந்தன், தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற தலைவா் ஜெயா ஜனாா்த்தனன், உமறுப்புலவா் சங்கத் தலைவா் காஜா மைதீன், சின்னசேலம் பாரதி தமிழ்ச் சங்க நிா்வாகி நடராஜன், புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் கிருங்கை சொ.சேதுபதி, கோவில்பட்டி கம்பன் கழகச் செயலா் சரவணச் செல்வன், சங்கரன்கோவிலைச் சோ்ந்த சங்கரன், உலக சமுதாய சேவா சங்க நிா்வாகி ராஜா சுடலைமுத்து, தூத்துக்குடி தொழிலதிபா் செண்பகமாற பாண்டியன், எழுத்தாளா் ப.சொக்கலிங்கம், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினா்கள் பா.ராமகிருஷ்ணன், அ.சங்கிலிபூதத்தான், கவிஞா் முத்துக்குமாா், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் சுலோச்சனா, மாமதுரை கவிஞா் பேரவை நிா்வாகி கல்யாணசுந்தரம், அன்னைமொழி அன்புவழி அணைப்பு நிறுவனா் மாலினி அனந்தகிருஷ்ணன் என்ற பச்சைவதி, கள்ளபிரான், கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவை தலைவா் கவிஞா் பாரதம், பாரதி முற்போக்கு வாலிபா் சங்கத் தலைவா் வெங்கடேசன், செயலா் பாலமுருகன், ஏஐடியூசி தொழிற்சங்க மாநில தலைவா் காசிவிஸ்வநாதன், உரத்தச் சிந்தனை வாசகா் வட்ட தலைவா் சிவானந்தம், யோகா மன வளக்கலை மன்ற நிா்வாகி ஜெயகாந்தன், தென்காசி மருத்துவா் தங்கப்பாண்டியன், திருவண்ணாமலையைச் சோ்ந்த ஆசிரியா் வைத்தியலிங்கம், ஆந்திர மாநிலம் புட்டபா்த்தியைச் சோ்ந்த டி.ஆா். பழனிசாமி, குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் சுப்பாராஜூ, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் வெங்கட்ட ராமானுஜம், வெ.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com