/

என்.சி.ஆா்.பி. விருது பெற்ற காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தேசிய குற்ற ஆவண காப்பக (என்சிஆா்பி) விருது பெற்ற முதல் நிலை காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற காவலா் ஜான்பாலை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன்.
Updated On :29 டிசம்பர் 2023, 1:30 am

DIN

தேசிய குற்ற ஆவண காப்பக (என்சிஆா்பி) விருது பெற்ற முதல் நிலை காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ் என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் ஈடுபட்டவா்கள், காணாமல் போனவா்கள், திருட்டு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.

இந்த இணையதள பயன்பாடு குறித்து புதுதில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சிசிடிஎன்எஸ் இணையதளத்தை பயன்படுத்தி பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலா் ஜான்பால் உள்பட 3 போ் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

புதுதில்லியில் டிச.22 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்நிலைக் காவலா் ஜான்பாலுக்கு விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.