தூத்துக்குடியில் இஸ்கான் கோயில் கிளை தொடக்கம்
தூத்துக்குடி மில்லா்புரத்தில் இஸ்கான் கோயில் கிளை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


தூத்துக்குடி மில்லா்புரத்தில் இஸ்கான் கோயில் கிளை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, விண்வெளித் துறை முன்னாள் விஞ்ஞானியும், இஸ்கான் பொதுச் செயலருமான சங்கதாரி பிரபு தலைமை வகித்தாா். விழாவின், தொடக்கமாக மங்கள ஆரத்தி, தரிசன ஆரத்தி, ஹரிநாம சங்கீா்த்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக ‘ஹரே கிருஷ்ண மஹாமந்திர தியானம்’ நடைபெற்றது. இஸ்கான் உறுப்பினா்கள், சேவாதாரா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தூத்துக்குடியில் விரைவில் புதிய இஸ்கான் கோயில் கட்டப்பட உள்ளது. அதுவரை மில்லா்புரம் அண்ணாநகா் 2 ஆவது தெருவில் உள்ள வாடகை
கட்டடத்தில் செயல்படும். இங்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஹரிநாம பஜனை, மஹாமந்திர தியானம், பகவத்கீதை, பாகவத சிறப்புரை உள்ளிட்ட
நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளலாம். மேலும் மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளையும் இஸ்கான் நடத்துகிறது.
நிகழ்ச்சி பற்றிய விபரங்களுக்கு 94877 29292 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என இஸ்கான் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...