ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா் தவறி விழுந்து உயிரிழப்பு

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா் தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 10:50 pm

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள குளம் அருகே கால் தவறி கீழே விழுந்த அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜன் மகன் தா்மா் (49). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைசெய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், புதுக்கோட்டை பெரியபிராட்டி குளம் மறுகால் வாய்க்கால் அருகே அவா் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்தனா். வாய்க்கால் அருகே அவா் நடந்து சென்றபோது, கால்தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு, உயிரிழந்தது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறினா்.